×

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா: டிடிவி தினகரன் வரவேற்பு

சென்னை: பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவிற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது பெண்களின் வளர்ச்சியை பொறுத்தே அமையும் என்று கூறியதோடு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50%ம் இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தி சாதனை படைத்து நாட்டின் முன்னோடியாக திகழ்ந்த ஜெயலலிதாவை இந்த நேரத்தில் நினைவுகூற விரும்புகிறேன். மேலும், நாட்டின் முக்கிய முடிவுகள் மற்றும் அதிகாரங்களில் பெண்களுக்கான பங்களிப்பை அதிகப்படுத்தும் 33 சதவிகிதம் இட ஒதுக்கீட்டு சட்டமசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றுவதோடு, அதனை விரைவில் அமலுக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

The post பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா: டிடிவி தினகரன் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : DTV ,Dhinakaran ,CHENNAI ,TTV Dinakaran ,AAMUK ,General ,Dinakaran ,
× RELATED முண்டாசு கவி பாரதியாரை இந்நாள்...