×

நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் தாயார் மறைவிற்கு முதல்வர் இரங்கல்

சென்னை: நிதித்துறை முதன்மை செயலாளராக இருந்து வரும் உதயச்சந்திரனின் தாயார் லீலாவதியின் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பு:
அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் தாயார் லீலாவதி, மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தாயாரின் மறைவால் வாடும் உதயச்சந்திரன் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக்கொள்கிறேன்.

The post நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் தாயார் மறைவிற்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Finance Secretary ,Udayachandran ,Chennai ,M. K. Stalin ,Leelavati ,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...