×

இந்தியாவுடன் மோதல் எதிரொலி: ஜம்மு – காஷ்மீர் செல்ல வேண்டாம்! நாட்டு மக்களுக்கு கனடா அறிவுறுத்தல்

ஒட்டாவா: இந்தியாவுடன் மோதல் எதிரொலியாக ஜம்மு – காஷ்மீர் செல்ல வேண்டாம் என்று தங்களது பிரஜைகளுக்கு கனடா அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த ஜூனில் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை, தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்தது.

இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்திய அரசின் முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். அதன் தொடர்ச்சியாக கனடாவில் இருக்கும் இந்திய தூதரை அந்நாடு வெளியேற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் இருக்கும் கனடா தூதரை 5 நாட்களில் நாட்டை விட்டு வெளியேறுமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இவ்விவகாரத்தால் இந்தியா – கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாடுகள் கவலையடைந்துள்ளன.

இந்நிலையில் கனடா அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய மாநிலமான ஜம்மு – காஷ்மீருக்கு, கனடா பிரஜைகள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரகத்தின் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அடுத்த மாதம் கனடா செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போதைய சூழ்நிலலையில் என்ஐஏ அதிகாரிகள் கனடா செல்லும் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post இந்தியாவுடன் மோதல் எதிரொலி: ஜம்மு – காஷ்மீர் செல்ல வேண்டாம்! நாட்டு மக்களுக்கு கனடா அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : India ,Jammu and Kashmir ,Canada ,OTTAWA ,Government of Canada ,Jammu and ,Kashmir ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...