
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 15-ஆம் தேதி அமலக்க துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது செந்தில் பாலாஜியின் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்படி செந்தில் பாலாஜி ஜாமீன் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் வாதாடிய மூத்த தலைவர் கபில் சிபில், செந்தில்பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகளுக்கு முன்பானது.
இதற்கு செந்தில்பாலாஜி தரப்பு, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை, வழக்கு பதியப்பட்ட ஆண்டிலிருந்து தற்போதுவரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.