×
Saravana Stores

தமிழ்நாடு அரசின் நிதித்துறை  முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

 


சென்னை: தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் அவர்களின் அன்னையார் லீலாவதி அவர்கள், உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது மறைவால் வாடும் திரு.உதயச்சந்திரன், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக நிதித்துறை செயலர் உதயச்சந்திரனின் தாயார் லீலாவதி இன்று காலமானார். அவருக்கு வயது 72 ஆகிறது. நாமக்கல் என்ஜிஓஓ காலனியைச் சேர்ந்தவர் த.உதயச்சந்திரன். தமிழக அரசின் நிதித்துறை செயலாளராகவும், சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவருடைய தாயார் லீலாவதி கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சேலம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னையில் அமைச்சர் உதயநிதியுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், தாயார் மறைவு செய்தி அறிந்து நாமக்கல்லுக்குப் புறப்பட்டு சென்றார்.

The post தமிழ்நாடு அரசின் நிதித்துறை  முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Secretary of Finance Department ,Tamil Nadu Government ,Udhayachandran ,Chief Minister of State of Tamil Nadu ,G.K. ,Stalin ,Chennai ,Chief Secretary of Finance ,Government of Tamil Nadu ,Udhyachandran ,Leelavati ,G.K. Stalin ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...