×

அரசியலமைப்பு புத்தகத்தில் மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய வார்த்தைகள் நீக்கம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: அரசியல் சாசனம் முன்னுரையில் இருந்து மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய வார்த்தைகள் நீக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவையொட்டி எம்.பி.க்கள் அனைவருக்கும் பரிசுப்பை வழங்கப்பட்டது. அதில் அரசியல் சாசனத்தின் நகல் நாடாளுமன்ற தொடர்பான புத்தகங்கள், நினைவு நாணயம் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் அரசியல் சாசன முன்னுரையில் மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய வார்த்தைகள் நீக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை காங்கிரஸ் குழு தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அரசியல் சாசன முன்னுரையில் இருந்து மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய 2 வார்த்தைகளும் நீக்கப்பட்டு இருப்பது கவலை அளிப்பதாக தெரிவித்தார். இந்த மாற்றத்தை அரசு தந்திரமாக மேற்கொண்டுள்ளது என்றும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப நினைத்ததாகவும் ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை என்றும் கூறினார்.

இதனிடையே காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் முதல் முதலில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தில் மதச்சார்பின்மை, சமத்துவம் வார்த்தைகள் இல்லை என்றும், இந்த வார்த்தைகள் 1976-ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தின் 42-வது திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

The post அரசியலமைப்பு புத்தகத்தில் மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய வார்த்தைகள் நீக்கம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Delhi ,Dinakaran ,
× RELATED புயல் சேத நிலவரம் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் நோட்டீஸ்..!!