×

காவிரி நீர் ஒழுங்காற்று வாரியம் இரட்டை நிலை எடுக்கிறது: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

சென்னை: காவிரி நீர் ஒழுங்காற்று வாரியம் இரட்டை நிலை எடுக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டின் கோரிக்கையை கர்நாடகா எந்த காலத்திலும் ஏற்றுக் கொண்டதில்லை. கர்நாடகாவில் தண்ணீர் இருக்கிறது என்று நாங்கள் கூறினோம், ஆனால் அவர்கள் தண்ணீர் இல்லை என்று மறுக்கிறார்கள். கர்நாடக அணைகளில் தண்ணீர் இருக்கிறதா? இல்லையா? என்பதை காவிரி நீர் ஒழுங்காற்று குழுதான் உறுதி செய்ய வேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாகத் தீர்ப்பாயம் அமைக்கலாம் என்று கூறினோம், அதை அவர்கள் மறுத்தார்கள். நாம் பெற்ற அனைத்து உரிமையும் உச்சநீதிமன்றம் மூலமே பெறப்பட்டது எனவும் கூறினார்.

The post காவிரி நீர் ஒழுங்காற்று வாரியம் இரட்டை நிலை எடுக்கிறது: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Caviri Water Regulatory Board ,Minister Thurimurugan ,Chennai ,Minister ,Thurimurugan ,Caviri Water Board ,Tamil ,Nadu ,Dumurugan ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...