×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களம் இறங்க ஸ்ரேயாஸ் தயார்

மொகாலி: பேட்கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் போட்டி நாளை மறுநாள் (22ம்தேதி) மொகாலியில் நடக்கிறது. 2வது போடடி 24ம்தேதி இந்தூர், 3வதுபோட்டி 27ம் தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது. உலக கோப்பைக்கு முன் இந்த தொடர் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் தொடரை கைப்பற்றினால் இந்தியா தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிக்கலாம். இந்த தொடரில் முதல் 2 போட்டியில் கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை முடிந்து கடந்த 2 நாட்களுக்கு முன் நாடு திரும்பிய இந்திய அணியினர் இன்று மொகாலியில் ஒன்று கூடுகின்றனர். நாளை அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதனிடையே முதுகு வலியால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் ஸ்ரேயாஸ் அய்யர் ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் மட்டுமே ஆடினார். தற்போது அவர் அதில் இருந்து மீண்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களம் இறங்குவது உறுதியாகி உள்ளது.

The post ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களம் இறங்க ஸ்ரேயாஸ் தயார் appeared first on Dinakaran.

Tags : Shreyas ,Australia ,Mohali ,Batcummins ,India ,Dinakaran ,
× RELATED அரை சதம் விளாசினார் ஷ்ரேயாஸ் இந்தியா 160 ரன் குவிப்பு