×

உக்ரைன் தானிய இறக்குமதி தடையை நீக்கியதற்கு எதிர்ப்பு: பல்கேரியாவில் விவசாயிகள் டிராக்டர்களை அணிவகுத்து போராட்டம்

கீவ்: உக்ரைன் தானியங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை முடிவுக்கு கொண்டுவருவதை எதிர்த்து பல்கேரியாவில் டிராக்டர்களை அணிவகுத்து நிற்க செய்து விவசாயிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது முதலே உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது பெருமளவில் குறைந்துள்ளது. நிலைமையை சமாளிக்க குறைந்த விலைக்கு தங்கள் நாட்டு தானியங்களை உக்ரைன் ஏற்றுமதி செய்தது.

இதனால் தங்கள் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதிய ஐரோப்பிய யூனியன் உக்ரைனில் இருந்து தானியங்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. இந்நிலையில், உக்ரைன் மீதான தடையை பல்கேரியா அரசு முடிவுக்கு கொண்டுவந்ததால் அங்குள்ள விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சோபியா பகுதியில் நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் உடன் கூடிய விவசாயிகள் அவற்றை அணிவகுக்க செய்து தாங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

The post உக்ரைன் தானிய இறக்குமதி தடையை நீக்கியதற்கு எதிர்ப்பு: பல்கேரியாவில் விவசாயிகள் டிராக்டர்களை அணிவகுத்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Kiev ,Bulgaria ,Dinakaran ,
× RELATED உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!