×

வரி ஏய்ப்பு புகார்.. ராதா இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சென்னை ராதா இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம் தெர்மல் பவர் பிளான்ட், துறைமுகங்களில் நிலக்கரி கையாளுதல் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் பல்வேறு ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சென்னை ஜாபர்கான் பேட்டை, புரசைவாக்கம், தேனாம்பேட்டை உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் சென்னை ராதா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான பொன்னேரி அருகே வில்லிவாயால் சாவடியில் உள்ள அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேட்டூர் அனல்மின் நிலையத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அங்கு மின்சாதன பொருட்களை கொள்முதல் செய்ததில் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

The post வரி ஏய்ப்பு புகார்.. ராதா இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!! appeared first on Dinakaran.

Tags : Radha Engineering Company ,Chennai ,Chennai Radha Engineering Company ,Tamil Nadu ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...