×

நடுவானில் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி… டெல்லி – சென்னை இண்டிகோ விமானத்தில் பரபரப்பு

சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லி விமான நிலையத்திலிருந்து நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் செங்கம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் மணிகண்டன் என்பவர் பயணித்துள்ளார். இந்த நிலையில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று அவசரகால கதவை மணிகண்டன் திறக்க முயற்சித்துள்ளார்.

இதனை அறிந்த விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்த அலறி கூச்சலிட்டனர். இதுபற்றி அறிந்த இண்டிகோ ஊழியர்கள் மணிகண்டனை தடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானி அளித்த புகாரை தொடர்ந்து, நடுவானில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற ராணுவ வீரர் மணிகண்டனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இண்டிகோ நிறுவனம் இதுகுறித்து சிஐஎஸ்எஃப் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில்; எங்கள் விமானத்தில் அவசரகால எமர்ஜென்ஸி கதவை திறக்க முயன்ற ஒரு பயணியை எங்கள் குழுவினர் அடையாளம் கண்டுகொண்டனர். எனவே நடைமுறையின்படி, நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம். அந்த பயணியை காவல்நிலையம் அழைத்துச் செல்ல CISF அதிகாரிகளை ஒதுக்குமாறு குழுவைக் கேட்டுக்கொள்கிறோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post நடுவானில் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி… டெல்லி – சென்னை இண்டிகோ விமானத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Naduwan, Delhi ,Chennai ,Delhi ,Nadhiwan ,
× RELATED தீவிர சிகிச்சை பிரிவில்...