×

பெருந்துறை சிப்காட்டில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய 4 தொழிற்சாலைகளை மூட உத்தரவு!!

ஈரோடு : பெருந்துறை சிப்காட்டில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய 4 தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் விதிகளை பின்பற்றாமல் ஆலை கழிவுகளை வெளியேற்றுவதால் சிப்காட் பகுதியில் 10 கிமீ சுற்றளவிற்கு குளங்களும் நிலத்தடி நீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

நேற்று மாலை பெய்த கனமழையை பயன்படுத்தி மழைநீருடன் கழிவுகள் திறக்கப்பட்டதால் 400 ஏக்கர் பரப்பளவிலான அங்குள்ள குளம் மாசு அடைவதாகவும் மக்கள் தெரிவித்து இருந்த நிலையில், 4 சாய தொழிற்சாலைகள் விதிகளை பின்பற்றாமல் கழிவுநீரை வெளியேற்றியதை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஆகஸ்ட் 30ம் தேதி முதல் கடந்த 7ம் தேதி வரை 3 அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு நடத்திய ஆய்வில் இந்த விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த 4 ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்து உடனடியாக மூடுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.

The post பெருந்துறை சிப்காட்டில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய 4 தொழிற்சாலைகளை மூட உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Perundurai ,Chipgat ,Perundurai Chipgat ,Sibgat ,Dinakaran ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...