×

குழந்தைகளின் பசி போக்கும் காலை உணவுத் திட்டம்: வரப்பிரசாதம் என்று பெற்றோர் நெகிழ்ச்சி..!!

சென்னை: காலை உணவு திட்டத்தை தவறுகள் இன்றி செயல்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சமையற்கூடத்தில் காலை 3 மணிக்கு வரும் சமையல் காரர்கள், காய்கறிகளை வெட்டி சமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். பக்குவமாக, கவனமாக தயாரிக்கப்படும் உணவுகள் ஒவ்வொருகட்டமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இறுதியில் அதிகாரி ஒருவர் தரத்தை சோதித்து சுவைத்து பார்த்த பின்னரே, சமையல் கூடத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்படுகிறது.

தயார் செய்யப்பட்ட உணவுகள் சரியாக 7 மணியளவில் ஹாட் பேக் பாத்திரங்களில் சுற்றுவட்டார அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன. அரசு செயல்படுத்தும் செயலியில், உணவின் வகை, தரம், தயாரிக்கப்படும் நேரம், சரியான அளவு, பள்ளிகளில் ஒப்படைக்கப்படும் நேரம் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்படுகின்றன. உணவுகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், இதுகுறித்த தரவுகள் அந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அதன் பிறகு குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மூலம் காலை உணவு பரிமாறப்படுகிறது. குழந்தைகளின் பசி போக்கும் காலை உணவுத் திட்டம் வரப்பிரசாதம் என்று பெற்றோர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

The post குழந்தைகளின் பசி போக்கும் காலை உணவுத் திட்டம்: வரப்பிரசாதம் என்று பெற்றோர் நெகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Coimbatore ,Dinakaran ,
× RELATED திருமணம் செய்வதாக கூறி கோவை மாணவி...