
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கவர்னர்
- ஆர் என் வைகோ
- வைகோ
- மதுமுகவின் 29வது பொதுக் குழு
- விகோவிற்கு
- தின மலர்
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுகவின் 29வது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரும் கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. ஆளுநர் ரவியை நீக்கக் கோரி 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட பிரதிகளை குடியரசுத் தலைவரிடம் இன்று வைகோ அளிக்க உள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்படுகிறார் என்றும், ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் மதிமுக சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. 57 எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் 50 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படும் ஆளுநரை நீக்க கோரி 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுவை ஜனாதிபதியிடம் அளிக்கிறார் வைகோ..!! appeared first on Dinakaran.