×

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழை: தேனி கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி: தமிழ்நாட்டில் காலை நேரத்தில் வெப்பநிலை அதிகமாக இருந்து வரும் சூழலில் மாலை நேரத்தில் தேனி, ஈரோடு, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. புதுக்கோட்டையில் 3-வது நாளாக மலை நேரத்தில் கனமழை கொட்டியது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கையில் காலை நேரத்தில் வெயில் அதிகமாக இருந்த நிலையில் மாலை நேரத்தில் 2-வது நாளாக கனமழை பெய்தது. பட்டுக்கோட்டையிலும் 2-வது நாளாக இரவு நேரத்தில் கனமழை பெய்தது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3-வது நாளாக கனமழை கொட்டியது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை நேரத்தில் கருமேகங்கள் திரண்டு கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் முதல் விட்டு விட்டு மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் நீடிக்கும் கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

திண்டுக்கல்லில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கோடை காலத்தை மிஞ்சும் வகையில் வெயிலின் தாக்கம் உள்ள நிலையில் மலை நேரத்தில் கருமேகங்கள் திரண்டு கனமழை பெய்தது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கொடைக்கானல் நுழைவாயில் பகுதியில் உள்ள வெள்ளி அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்மழையால் அருவியில் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் கொட்டுவதை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்மழை காரணமாக மலைப்பகுதியில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குன்னூர் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் மலைப்பாதை வழியாக பவானி அணையை அடைகிறது. இதனிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழை: தேனி கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Thindukkal ,West Continuing ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...