×

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலமே இதுவரை உரிய தீர்வை பெற்றுள்ளோம் :அமைச்சர் துரைமுருகன்

சென்னை : காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலமே இதுவரை உரிய தீர்வை பெற்றுள்ளோம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி வழக்கு தொடர்பாக டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். காவிரியில் கர்நாடக அரசு வினாடிக்கு 24,000 கன அடி நீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், வழக்கறிஞர் முகுல் ரோத்தகியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, உமாபதி மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன் உடன் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்,”கர்நாடகம் தண்ணீரை வைத்துக் கொண்டு விட மறுக்கிறது.காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தான் ஒரே தீர்வு.காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலமே இதுவரை உரிய தீர்வை பெற்றுள்ளோம்,”என்றார். இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் நீரின் அளவு 3,834ல் இருந்து 4,674 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 2,674 கன அடி நீரும் கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. மறுபுறம் காவிரி நதிநீர் பங்கிட்டு பிரச்னையில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு தீர்வுகாணும் வகையில் டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள். காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் நேரடியாக தலையிட்டு கர்நாடக மாநிலத்தை காக்க வேண்டும் என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலமே இதுவரை உரிய தீர்வை பெற்றுள்ளோம் :அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Minister ,Thuraymurugan ,Chennai ,Tamil Nadu ,Water ,Caviri ,Kaviri ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...