×

தென்மண்டல வளரி போட்டி

திருச்சுழி, செப்.20: திருச்சுழி அருகே தென் மண்டல அளவிலான வளரி போட்டி நடைபெற்றது. வள்ளுவன் தற்காப்பு கலை பயிற்சி மையம் சார்பில் தென் மண்டல அளவிலான வளரி போட்டி திருச்சுழி அருகே கானா விலக்கு பகுதியில் நடத்தப்பட்டது. இப்போட்டியை திருச்சுழி ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்னுத்தம்பி தொடங்கி வைத்தார். இதில் விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் இப்போட்டியை சென்னை சேர்ந்த மருது வளரிகள் விளையாட்டு மேம்பாட்டு சங்க தலைவர் டாக்டர் கார்த்திக் ராஜா மற்றும் வள்ளுவன் தற்காப்பு கலை பயிற்சி மையம் ஆசான் காளிமுத்து கலந்து கொண்டு நடத்தினர்.

The post தென்மண்டல வளரி போட்டி appeared first on Dinakaran.

Tags : Southern Regional Development Competition ,Thiruchuzhi ,South Zone level Vari competition ,Valluvan Martial Arts Training Center ,Dinakaran ,
× RELATED திருச்சுழி அருகே கல்லூரணியில் 700...