×

குடியிருப்பு அருகே கொட்டியதால் மாநகராட்சி குப்பை வாகனம் பறிமுதல்

சிவகாசி, செப்.20: நாரணாபுரம் ஊராட்சியில் குப்பை கொட்டியதாக மாநகராட்சி வாகனத்தை ஊராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சியில் ரத்தினம் நகர் – சரஸ்வதி நகர் இடையே உள்ள பகுதியில் கடந்த ஒரு மாதமாக சிவகாசி மாநகராட்சியின் குப்பைகள் கொட்டப்பட்டு வந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி குப்பைகள் கொட்டப்படுவதால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மாநகராட்சி வாகனம் சம்பந்தப்பட்ட இடத்தில் குப்பை கொட்ட வந்துள்ளது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்ற ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜன் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் குப்பை கொட்டிய மாநகராட்சி வாகனத்தை பறிமுதல் செய்தனர். சம்பவத்தை கேள்விப்பட்ட மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் அபுபக்கர்சித்திக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வார காலத்திற்குள் அனைத்து குப்பைகளையும் அள்ளி சுத்தப்படுத்தி விடுவதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பாக உறுதி அளிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி வாகனத்தை ஊராட்சி நிர்வாகம் நிர்வாகம் விடுவித்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post குடியிருப்பு அருகே கொட்டியதால் மாநகராட்சி குப்பை வாகனம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Panchayat administration ,Naranapuram Panchayat ,
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!