×

முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிப்பு

கம்பம், செப். 20: கம்பத்தில் முன்னாள் ராணுவ வீரர்களை குடும்பத்துடன் கவுரவிக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பாலமுத்தழகு குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார். கரார் கடை உமர் பாரூக், பெரியார் வைகை பாசன சங்கத்தலைவர் பொன்.காட்சிகண்ணன் முன்னிலை வகித்தனர். வின்னர் அலிம் மற்றும் கலிம் வரவேற்பு உரை நிகழ்த்தினர். கவிஞர் பாரதன் வாழ்த்துரை வழங்கினார். சமூக ஆர்வலர்கள் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 97 ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். ஆசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

The post முன்னாள் ராணுவ வீரர்கள் கவுரவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kampham ,Gamba ,Palamuthazhagu Group ,Dinakaran ,
× RELATED பணமோசடி செய்த இருவர் மீது வழக்கு