×

மானாமதுரை அலங்காரகுளத்தில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கரைப்பு

மானாமதுரை, செப். 20: விநாயகர்சதுர்த்தி விழா முடிந்ததையடுத்து மானாமதுரையில் உள்ள புனித அலங்காரகுளத்தில் ஆயிரக்கணக்கான சிலைகள் கரைக்கப்பட்டன. மானாமதுரை நகரில் அண்ணாமலை நகர், சாஸ்தா நகர், மாரியம்மன் நகர், பழைய தபால் ஆபிஸ் தெரு, பெருமாள் கோயில் தெரு, கிருஷ்ணராஜபுரம் காலனி, ரயில்வே காலனி, சிப்காட் உள்ளிட்ட 30 இடங்களில் நேற்று முன்தினம் விநாயகர்சிலைகள் வைக்கப்பட்டு சிலைகளுக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது தொடர்மழை பெய்ததால் சதுர்த்தியன்று நடைபெற வேண்டிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டன.

நேற்று காலை பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட சிலைகள் பழைய பஸ் ஸ்டாண்டு, அண்ணா சிலை, தேவர் சிலை, சோனையா ்கோயில் விலக்கு வழியாக ஊர்வலமாக புறப்பட்டு சன்னதிபுதுக்குளம் ரோட்டில் உள்ள புனித அலங்காரகுளத்திற்கு கொண்டுவரப்பட்டன. இந்த முறை மழையின்றி அலங்காரகுளத்தில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்ததால் பெரிய, மற்றும் நடுத்தர அளவிலான விநாயகர் சிலைகளை கரைப்பதில் சிரமம் ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட இடங்களில் விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

The post மானாமதுரை அலங்காரகுளத்தில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கரைப்பு appeared first on Dinakaran.

Tags : Manamadurai Amanakulam ,Manamadurai ,Vinayakasadurthi festival ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...