×

காளையார்கோவிலில் களைகட்டிய விநாயகர் சிலைகள் ஊர்வலம்

காளையார்கோவில், செப்.20: காளையார்கோவிலில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. காளையார்கோவிலில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 13 விநாயகர் சிலைகள், செட்டியூரணி சித்தி விநாயகர் கோயிலுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. தொண்டி சாலை, பேருந்து நிலையம் காளீஸ்வரர் கோயில், மாரியம்மன் கோயில் வழியாக தெப்பக்குளத்தை அடைந்தது. பின்னர் சிலைகள் தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டன.

The post காளையார்கோவிலில் களைகட்டிய விநாயகர் சிலைகள் ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Kalayar temple ,Kalaiyar Temple ,Vinayagar Chaturthi ,Chetyurani ,
× RELATED காசிமேடு விநாயகர் ஊர்வலத்தில்...