×

பவானியில் கட்டிடத்தின் மீது சாய்ந்த புளியமரம்: அகற்ற மக்கள் கோரிக்கை

 

பவானி, செப்.20: பவானி – அந்தியூர் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே ரோட்டோரத்தில் உள்ள புளியமரம் வலுவிழந்து முறிந்த நிலையில் காணப்படுகிறது. மரத்தின் ஒருபகுதி சேதமடைந்துள்ளதால் பலத்த காற்று, மழையின் போது விரிசல் ஏற்பட்டு அருகாமையில் உள்ள கட்டிடத்தின் மீது சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. அப்பகுதியில் மின்கம்பிகள், கடைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அதிகமுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள இம்மரத்தை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பவானியில் கட்டிடத்தின் மீது சாய்ந்த புளியமரம்: அகற்ற மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bhawani ,Panchayat Union ,Andhiur ,Dinakaran ,
× RELATED ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியதால் பவானியில் போக்குவரத்து நெரிசல்