×

ரேஷன் பொருட்கள் பதுக்கல், கடத்தல் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்

 

திருவாரூர், செப். 20: தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இயக்குனர் வன்னிய பெருமாள் மற்றும் திருச்சி எஸ்.பி சுஜாதா, டிஎஸ்பி சரவணன் ஆகியோர் உத்தரவின் பேரில், திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்தப்படுவது தொடர்பாக தடுப்பு நடவடிக்கையில்போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொது விநியோக திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, பாமாயில் மற்றும் கோதுமை போன்றவற்றை கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும். இந்த குற்றத்தை செய்யும் நபர்கள் மீது கள்ள சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே இந்த குற்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்துவது மற்றும் பதுக்குவது தெரிய வந்தால் இது தொடர்பான புகார்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800 599 5950 என்ற எண்ணில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இந்த கட்டணமில்லா அலைபேசி எண் குறித்தும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், ரேஷன் கடைகள், ஊராட்சி அலுவலகங்கள் உட்பட பல்வேறு பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை குற்றப்புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

The post ரேஷன் பொருட்கள் பதுக்கல், கடத்தல் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tamil Nadu Civil Supply Crime Investigation Department ,Vannia Perumal ,
× RELATED அனைத்து தடுப்பணை கதவுகளும் திறப்பு;...