×

கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

தஞ்சாவூர், செப். 20: தஞ்சாவூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாநில தலைவர் சின்னசாமி, பொதுச் செயலாளர் சுந்தரம், துணை பொது செயலாளர் ராஜா சிதம்பரம், மாநில நிர்வாக குழு மணிமொழியன், நெடார் கலைச்செல்வன் உள்பட பலர் சிறப்புரையாற்றியனர்.

ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற உரிய நீரை வழங்காத கர்நாடகா அரசை கண்டித்தும், நடுநிலைத் தவறி செயல்படும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தரை நீக்கிவிட்டு, நடுநிலை உள்ள புதிய ஆணையம் அமைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Farmers Association ,Karnataka government ,Thanjavur ,Tamil Nadu Farmers Union ,Thanjavur Head Post Office ,Dinakaran ,
× RELATED கீழ்பவானி வாய்க்காலில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதிக்க வேண்டும்