×

மாத்தூரில் நாளை மின் நிறுத்தம்

 

விராலிமலை, செப்.20:விராலிமலை ஒன்றியம், மாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் மாத்தூர் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது: மாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மாத்தூர் டவுன் மற்றும் அதற்கு உட்பட்ட இண்டஸ்ட்ரியல் பகுதி, குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர்,சாமி ஊரணிபட்டி,மலையேறி, ஆம்பூர் பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி,செங்களாக்குடி, சீத்தப்பட்டி,குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம் பட்டி,சஞ்சீவிராயர் கோவில் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாத்தூரில் நாளை மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Mathur ,Viralimalai ,Viralimalai union ,Tamil Nadu Electricity ,Dinakaran ,
× RELATED மத்தூரில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி