
- வைட்டமின்
- திருக்களம்பூர் அங்கன்வாடி மையம்
- Ponnamaravati
- தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை
பொன்னமராவதி,செப்.20: தமிழ்நாடு அரசு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவின்படி நேற்று முதல் வரும் 23ம் தேதி வரை 6 மாத குழந்தைகள் துவங்கி 60 மாதங்கள் உள்ளடக்கிய அனைவருக்கும் வைட்டமின் திரவம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அந்த பகுதி ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் இந்த வைட்டமின் திரவம் வழங்கப்பட உள்ளது. விடுபடுவோருக்கு 25ம் தேதி அன்று அனைவருக்கும் வழங்க ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் துவக்க நாளான நேற்று திருக்களம்பூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இந்த திரவம் வழங்கப்பட்டது. இதில் கிராம சுகாதாரசெவிலியர் அங்கன்வாடி அலுவலர்கள், உதவியாளர்கள், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ச்சியாக திருக்களம்பூர் அண்ணா நகர் அரசு துவக்கப்பள்ளியில் சுகாதார ஆய்வாளர் உத்தமன் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். இதில் தலைமையாசிரியர், டெங்கு களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.
The post திருக்களம்பூர் அங்கன்வாடி மையத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் appeared first on Dinakaran.