×

கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம்

 

ஜெயங்கொண்டம்,செப்.20: ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி இரண்டாம் நாள் விழாவாக சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் 21ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு நேற்று இரண்டாம் நாள் விழாவாக மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக விநாயகருக்கு திரவிய பொடி மாவு பொடி மஞ்சள் சந்தனம் தேன் எலுமிச்சை பன்னீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நேற்று நடைபெற்றது. அபிஷேகங்கள் தீபாராதனை முடிந்து விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான மக்கள் விநாயகரை வணங்கி அருள் பெற்று சென்றனர்.

The post கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Gangaikonda Cholapuram ,Ganesha ,Jayangkondam ,Jayangondam ,Vinayagar ,Vinayagar Chaturthi festival ,
× RELATED கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக மரபு வார விழா