×

பேய்க்குளம் கடைகளில் புகையிலை விற்ற இருவர் கைது

சாத்தான்குளம், செப். 20: சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார், உடனடியாக ரோந்து சென்றபோது அம்பலச்சேரியில் கோயில்பிச்சை மகன் சின்னப்பா (38) என்பவரது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவது தெரிய வந்தது. அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பேய்க்குளம் பஜாரில் அருள்ராஜ் (52) என்பவரது குளிர்பான புகையிலை பதுக்கி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அருள்ராஜை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post பேய்க்குளம் கடைகளில் புகையிலை விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Beyikulam ,Satankulam ,Beikkulam ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி