×

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்பட்டியில் பால்குடம் ஊர்வலம்

கோவில்பட்டி, செப். 20: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி சக்தி விநாயகர் கோயிலில் பால்குடம் ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில்பட்டி கதிர்வேல் நகர் பகுதியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோயிலில் சதுர்த்தியை முன்னிட்டு கருமாரியம்மன் கோயிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பால்குடம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் யூனியன் துணை சேர்மன் பழனிசாமி, மாவட்ட பஞ். உறுப்பினர் சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மாணவரணி தலைவர் செல்வக்குமார், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் மனோகரன், கோபி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவில்பட்டி கிருஷ்ணாநகர் ராஜ விநாயகர் கோயில், கடலையூர் மறவர் காலனி விநாயகர் கோயில், சீனிவாச நகர் விநாயகர் கோயில், காமராஜ் நகர் சக்தி விநாயகர் கோயில் ஆகியவற்றில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் அன்னதானத்தை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்பட்டியில் பால்குடம் ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Balkudam ,Kovilpatti ,Ganesha Chaturthi ,Vinayagar Chaturthi festival ,Palkudam ,Shakti Vinayagar Temple ,
× RELATED கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளி சமூகத்தரவு கணக்கெடுப்பு பயிற்சி