×

தெடாவூர்-புனல்வாசல் சாலையில் 20 நாட்கள் போக்குவரத்துக்கு தடை

கெங்கவல்லி, செப்.20: பாலம் கட்டும் பணி மேற்கொள்வதால் தெடாவூர்-புனல்வாசல் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் காட்டுக்கோட்டை- சதாசிவபுரம்- தெடாவூர் சாலையில், புனல்வாசல் முதல் தெடாவூர் வரை உள்ள சாலையில் சிறுபாலம் கட்டும் பணி மேற்கொள்வதால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 21.09.23 முதல் 10.10.23 வரை 20 நாட்களுக்கு புனல்வாசல்- தெடாவூர் வரை செல்லும் சாலையை மாற்று பாதையாக சின்ன புனல்வாசல் வழியாக ஆத்தூர்-பெரம்பலூர் சாலையினையும், புனல்வாசல் ஊர் வழியாக வீரகனூர் செல்பவர்கள் ஸ்ரீ ராகவேந்திரா பள்ளி வழியாக செல்லும் சாலையை பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

The post தெடாவூர்-புனல்வாசல் சாலையில் 20 நாட்கள் போக்குவரத்துக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Thedaur-Punalvasal road ,Kengavalli ,Thedavur-Punalvasal road ,Dinakaran ,
× RELATED 30 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் பணி துவக்கம்