×

இந்து முன்னணியினர் 36 பேர் கைது

மேட்டூர், செப்.20: சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில் மேட்டூர் அருகே நங்கவள்ளியில் 8 இடங்களில் 4 அடி முதல் 8 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை நேற்று மேட்டூர் காவிரியில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தானபதியூரிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஆனால், உரிய அனுமதி பெறாததால் ஏடிஎஸ்பி கண்ணன், டிஎஸ்பி சங்கீதா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அனுமதி பெறாமல் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தக்கூடாது என போலீசார் தடுத்தனர். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்து முன்னனி கோட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் 10 பெண்கள் உட்பட 36 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

The post இந்து முன்னணியினர் 36 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mettur ,Chaturthi festival ,Nangavalli ,Hindu Front ,Hindu Fronts ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அருகே பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் மகன், பெண் அதிகாரி பலி