×

140 ஓட்டல்களில் திடீர் சோதனை

நாமக்கல், செப்.20: நாமக்கல்லில் உள்ள ஐவின்ஸ் ரெஸ்ட்டாராண்டில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி கலையரசி (14). என்பவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டல்களில், உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 140 கடைகளில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் 82 கிலோ சமையல் பொருட்கள் மற்றும் கெட்டுபோன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் 35 கடைகளுக்கு தலா ₹1000 அபராதம் விதிக்கப்பட்டு, அந்த கடையின் உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு துறையினர் நோட்டீஸ் வழங்கினர். இதுகுறித்து மாவட்ட அலுவலர் அருண் கூறுகையில், இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும். ஓட்டல் உரிமையாளருக்கு தனியாக கூட்டம் நடத்தி, உரிய அறிவுரை வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் சவர்மா தயாரிப்பது தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

The post 140 ஓட்டல்களில் திடீர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Kalaiyarasi ,Ivins ,Dinakaran ,
× RELATED புதிய செயலி மூலம் வாகன புகை பரிசோதனை சான்று