×

துப்பாக்கியுடன் 2 பேர் கைது தி.கோடு ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை

திருச்செங்கோடு, செப்.20: நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் திருச்செங்கோடு நகரில் 2 கடைகளில் கெட்டுப்போன பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த சுமார் 250 கிலோ எடையுள்ள கோழி இறைச்சிகள், மீன் துண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.நகர பகுதியில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த ஆய்வில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சிங்காரவேல், நகராட்சி துப்புரவு அதிகாரி வெங்கடாசலம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கைப்பற்றப்பட்ட 250 கிலோ இறைச்சியை பினாயில் ஊற்றி அழித்ததுடன், ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

The post துப்பாக்கியுடன் 2 பேர் கைது தி.கோடு ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : T. Kodu. Thiruchengode ,Namakkal ,Tiruchengode ,Thiruchengode ,
× RELATED சோனியா காந்தி பிறந்த நாள் விழா