×

சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா

தேன்கனிக்கோட்டை, செப்.20: தேன்கனிக்கோட்டையில் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு, இந்து, முஸ்லிம்கள் இணைந்து கரைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை கிசான் தெருவில் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் சகோதரத்துவத்தை உருவாக்க சமத்துவ விநாயகர் என்ற பெயரில் நேற்று முன்தினம் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. அதில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த சமத்துவ விநாயகர் சிலையை நேற்று கரைக்க ஏற்பாடு செய்து, முஸ்லிம்கள் தேங்காய், பழம் கொண்டு வந்து பூஜையில் பங்கேற்றனர். பின்னர் கிரேன் மூலம் டிராக்டரில் ஏற்றி எம்ஜி ரோடு, பஸ் நிலையம் வழியாக தேன்கனிக்கோட்டை பெரிய ஏரியில் கரைக்க ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பங்கேற்று பூஜை செய்து நீர்நிலைகளில் கரைக்க ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதில் மாநில தலைவர் தேன்கு.அன்வர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா appeared first on Dinakaran.

Tags : Samatthu Ganesha Chaturthi Festival ,Dhenkanikottai ,Samattuva Ganesha Chaturthi festival ,Hindus ,Muslims ,Krishnagiri District ,
× RELATED மாடுகளை திருடிய வழக்கில் 3 பேர் கைது