×

மயிலாடியில் அங்கன்வாடி திறப்பு விழா

அஞ்சுகிராமம், செப்.20: மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய அங்கன்வாடி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவடைந்து திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் விஜயலெட்சுமி பாபு தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம், செயல் அலுவலர் அம்புரோஸ், மயிலாடி பேரூர் அதிமுக செயலாளர் மனோகரன், முன்னாள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் பெருமாள் என்ற சீனி, பேரூர் மாணவரணி செயலாளர் பி.வி.மணிகண்டன், கவுன்சிலர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். விழாவில் மருங்கூர் பேரூராட்சி தலைவர் லெட்சுமி சீனிவாசன், மயிலாடி பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆர்.என்.பாபு, சுப்புலெட்சுமி, பாமா, ரேவதி, பேரூர் அதிமுக செயலாளர்கள் அஞ்சை இராஜபாண்டியன், அழகை மணிகண்டன், அதிமுக நிர்வாகிகள் சிந்தாமணி, மகேஷ், கண்ணன், ராஜேந்திர மிக்கேல், நாதன், அந்தோணி ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மயிலாடியில் அங்கன்வாடி திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Mailadi ,Anjugram ,Thalai Sundaram ,MLA ,Ward 8 ,Mailadi Municipal Corporation ,
× RELATED தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களை தரம் உயர்த்த ரூ.395.76 லட்சம் ஒதுக்கீடு!!