×

பொருட்காட்சிக்கு அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 அரசு ஊழியர்கள் கைது: நாமக்கல் கவிஞர் மாளிகையில் பரபரப்பு

சென்னை: பொருட்காட்சிக்கு அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை பழங்கானத்தம் தண்டல்காரன்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவர், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பொருட்காட்சி நடத்த திட்டமிட்டு, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த கலெக்டர் ஜெயசீலன், தலைமைச் செயலகத்தில் உள்ள கள விளம்பர பிரிவுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் இந்த விண்ணப்பத்திற்கு அனுமதி வழங்காமல் தாமதித்ததாக கூறப்படுகிறது.

விண்ணப்பம் தாமதம் ஆவது பற்றி மாணிக்கவாசகம் விசாரிக்க சென்றார். அப்போது சம்பந்தப்பட்ட பிரிவில் பணியாற்றும் பிரிவு அதிகாரியான அன்பரசு என்பவர் பொருட்காட்சிக்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத மாணிக்கவாசகம், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி புகார் கொடுத்தவரிடம் ரூ.15 ஆயிரத்தை ெகாடுத்து அனுப்பினர்.

நாமக்கல் கவிஞர் மாளிகையில் 9வது மாடியில் உள்ள அலுவலகத்தில் வைத்து பிரிவு அதிகாரி அன்பரசுவிடம் மாணிக்கவாசகம் பணத்தைக் கொடுத்தார். அவரோ பணத்தை உதவியாளர் பாலாஜியிடம் கொடுக்கும்படி கூறினார். அவரிடம் பணத்தைக் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அன்பரசு, பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் சோதனையிட்டபோது அவர்களிடம் 3 கவரில் இருந்த ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

The post பொருட்காட்சிக்கு அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 அரசு ஊழியர்கள் கைது: நாமக்கல் கவிஞர் மாளிகையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal poet's ,Chennai ,Madurai ,Palanganatham… ,Namakkal poet's house ,
× RELATED போலீஸ் மீது வழக்கு பதியக்கோரி அமலாக்கத்துறை மனு