×

ட்வீட் கார்னர்… ரஜினிக்கு கோல்டன் டிக்கெட்!

பல துறைகளிலும் சாதனை படைத்து இந்தியாவின் அடையாளங்களாக விளங்கும் பிரபலங்களுக்கு, ஐசிசி உலக கோப்பை ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளையும் நேரில் கண்டுகளிக்கும் வகையில், கிரிக்கெட் வாரியம் ‘கோல்டன் டிக்கெட்’ வழங்கி கவுரவித்து வருகிறது. ஏற்கனவே பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்ட நிலையில், நடிகர் ரஜினியை சென்னையில் நேற்று சந்தித்த பிசிசிஐ செயலர் ஜெய் ஷா ‘கோல்டன் டிக்கெட்’ வழங்கினார். இத்தகவலை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ X சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.

The post ட்வீட் கார்னர்… ரஜினிக்கு கோல்டன் டிக்கெட்! appeared first on Dinakaran.

Tags : Rajini ,India ,ICC World Cup ODI ,Dinakaran ,
× RELATED பைனலில் ஆஸ்திரேலியா: இந்தியாவுடன் 19ம் தேதி மோதல்