×

ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட் இந்தோனேசியாவுக்கு எதிராக 15 ரன்னில் சுருண்டது மங்கோலியா: மலேசியா அபார வெற்றி

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் டி20ல் இந்தோனேசியாவுடன் நேற்று மோதிய மங்கோலியா வெறும் 15 ரன்னில் சுருண்டு 172 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. ஆசிய விளையாட்டுப் போட்டி செப். 23ம் தேதி சீனாவின் ஹாங்சோ நகரில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. அதற்கு முன்பாகவே கால்பந்து, வாலிபால் போட்டிகள் நேற்றே தொடங்கிவிட்டன. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள டி20ன் மகளிர் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் நேரடியாக நாளை முதல் காலிறுதியில் களம் இறங்க உள்ளன. எஞ்சிய 4 அணிகளுக்கான தகுதிச் சுற்றில் இந்தோனேசியா-மங்கோலியா, மலேசியா-ஹாங்காங் அணிகள் விளையாடின.

இந்தோனேசியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவிக்க (லூ தேவி 62, சகரினி 35), 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மங்கோலியா 10 ஓவரில் 15 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீராங்கனை இச்சின்கர்லூ 5 ரன் எடுத்ததே அதிகபட்சமாக அமைந்தது. 7 பேர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். இந்தோனேசியா 172 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை வசப்படுத்தியது. இந்தோனேசிய தரப்பில் ஆண்ட்ரியானி 4 விக்கெட் அள்ளினார். 2வது ஆட்டத்தில் மலேசியா – ஹாங்காங் அணிகள் களம் கண்டன. மலேசியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுக்க, அடுத்து களமிறங்கிய ஹாங்காங் 20 ஓவரில் 82 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. மலேசியா 22ரன் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இன்று நடைபெறும் தகுதிச்சுற்று காலிறுதியில் ஹாங்காங்-மங்கோலியா மோதுகின்றன.

The post ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட் இந்தோனேசியாவுக்கு எதிராக 15 ரன்னில் சுருண்டது மங்கோலியா: மலேசியா அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Asian Games ,Indonesia ,Mongolia ,Malaysia ,Hangzhou ,Asian Games series ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்