×

கேரளா கோயிலில் சாதி பாகுபாடு: தலித் அமைச்சர் வேதனை

திருவனந்தபுரம்: கேரள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தேவசம் போர்டு அமைச்சராக இருப்பவர் ராதாகிருஷ்ணன். தலித் சமூகத்தை சேர்ந்த அவர் கோட்டயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு நம் மாநிலத்தில் ஒரு கோயிலில் நடைபெற்ற நடைப்பந்தல் திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். விழாவை கோயில் தலைமை பூசாரி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் விளக்கு ஏற்றுவதற்காக தீபத்தை என்னிடம் தரும்படி வேறொரு பூசாரியிடம் கூறினார். ஆனால் அந்த பூசாரி தீபத்தை என்னிடம் தராமல் கீழே வைத்து விட்டார். கீழே வைக்கப்பட்ட அந்த தீபத்தைத் தான் நான் எடுக்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்திருந்தனர். நான் தலித் சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் தான் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார். கண்ணூர் மாவட்டம் பையனூரில் உள்ள நம்பியாத்ரா சிவன் கோயிலில் கடந்த ஜனவரி 26ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அவமதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, “அமைச்சர் ராதாகிருஷ்ணனுடன் பேசி இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

The post கேரளா கோயிலில் சாதி பாகுபாடு: தலித் அமைச்சர் வேதனை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Dalit ,Thiruvananthapuram ,Radhakrishnan ,Minister ,Kerala Backward Classes and Devasam Board ,Kottayam ,
× RELATED கேரள அரபி பாடசாலையில் மாணவர்களிடம் பாலியல் தொந்தரவு: 3 ஆசிரியர்கள் கைது