×

தனபாலுக்கு தடை கோரி இபிஎஸ் வழக்கு தொடர அனுமதி

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், முன்னுக்குப்பின் முரணான, பொய்யான தகவல்களை தெரிவித்துவரும் தனபால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நேற்று நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, மனுதாரர் மீது தொடர்ந்து தவறான கருத்துகளை தனபால் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார் என்றார். இதையடுத்து நீதிபதி, மனுதாரர் குற்றம்சாட்டும் நபர் சென்னையில் இல்லை. எனவே அவருக்கு இந்த வழக்கு குறித்து தெரியப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர மனுதாரருக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறி விசாரணையை தள்ளிவைத்தார்.

The post தனபாலுக்கு தடை கோரி இபிஎஸ் வழக்கு தொடர அனுமதி appeared first on Dinakaran.

Tags : EPS ,Dhanapal ,Chennai ,Koda Nadu ,
× RELATED ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்