×

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை முன்னெடுத்து செல்லும் வாய்ப்பை கடவுள் எனக்கு வழங்கி உள்ளார் : பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி : நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாள் அமர்வு பழைய கட்டிடத்தில் நடைபெற்றது. 2வது நாளில் அங்குள்ள மைய மண்டபத்தில் நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக எம்பி மேனகா காந்தி, காங்கிரசின் மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் அவர்களை தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். அரசியல் சாசனத்திற்கு வடிவம் கொடுக்கப்பட்டதோடு, சுமார் 4000 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிற்பகலில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மக்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய முதல் உரையில், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை முன்னெடுத்து செல்லும் வாய்ப்பை கடவுள் தமக்கு வழங்கி உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், “மகளிர் இட ஒதுக்கீடு குறித்த விவாதம் நீண்ட காலமாக நீடித்தது. வாஜ்பாய் ஆட்சியில் பல முறை அந்த மசோதா கொண்டு வரப்பட்டது.ஆனால் மசோதாவை நிறைவேற்ற போதிய பெரும்பான்மை இல்லை. அதனாலேயே அந்த கனவு நிறைவேறாமல் இருந்து வந்தது.ஆனால் இந்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை முன்னெடுத்துச் செல்ல கடவுள் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளார்,”என்றார். பிரதமர் மோடியின் உரையை தொடர்ந்து புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் முதல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

The post மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை முன்னெடுத்து செல்லும் வாய்ப்பை கடவுள் எனக்கு வழங்கி உள்ளார் : பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : God ,PM Modi ,Delhi ,Lok Sabha ,
× RELATED ஒரு தெய்வம் தந்த பூவே