×

மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதால் கழிவுநீர் இறைக்கும் நிலையத்தின் நேரம் மாற்றியமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

புழல்: சென்னை புழல் அடுத்த புத்தாகரம் தாங்கள் ஏரி மதுரவாயல் – புழல் சைக்கிள் ஷாப் செல்லும் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலை அருகில் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் கழிவு நீர்இறைக்கும் நிலையம் உள்ளது. இங்கு புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், கதிர்வேடு, லட்சுமிபுரம், ரெட்டேரி, விநாயகபுரம், புத்தாகரம் மற்றும் சூரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகளில் சேறும் கழிவு நீர் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டு இறக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பணி நடைபெறுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், அலுவலர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பல நேரங்களில் காலதாமதமாக செல்கின்றனர். இதனருகே உள்ள பிரபல தனியார் கல்லூரி, பள்ளி மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் கழிவுநீர் வாகனங்களால் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் லாரியில் இருந்து கழிவு நீர், சர்வீஸ் சாலையிலே கசிவதால் சாலை முழுவதும் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது.

எனவே பழைய முறைப்படி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கழிவுநீர் இறைக்கும் பணி நடைபெற வேண்டும். அப்படி செயல்பட்டால் யாருக்கும் எந்த தொல்லையும் இருக்காது. காலை 6 மணி முதல் கழிவு நீர் வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசலும் மற்றும் நடை பயிற்சி செல்லும் பொது மக்களும் அருகில் உள்ள பூங்காவிற்கு வரும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பழைய படி நேரத்தை மாற்றி செயல்படுத்த சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு, பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதால் கழிவுநீர் இறைக்கும் நிலையத்தின் நேரம் மாற்றியமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Chennai Puzhal ,Dangal Lake Maduravayal ,Puzhal Cycle Shop ,
× RELATED வேலூர் மத்திய சிறை கூடுதல்...