
சண்டிகர்: சர்வதேச மல்யுத்த வீராங்கனையின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச வீடியோ வைரலாகி வருவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலம் ஜிண்ட் பகுதியைச் சேர்ந்த சர்வதேச பெண் மல்யுத்த வீராங்கனையின் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சதர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தனது மகளின் புகைப்படத்துடன் ‘மார்பிங்’ செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் தனது மகளுக்கு எதிராக அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் டிஎஸ்பி ரவி குந்தியா கூறுகையில்:
பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனையின் தந்தை அளித்த புகாரின் பேரில், மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதுதவிர, அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பியவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
The post மார்பிங் செய்து வெளியீடு; மல்யுத்த வீராங்கனையின் ஆபாச வீடியோ வைரல் appeared first on Dinakaran.