×

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிள்ளையார்பட்டியில் உற்சவர் விநாயகர் வெள்ளி கேடயத்தில் ஊர்வலம்..!!

சிவகங்கை: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோயிலில் கடந்த 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 6-ம் நாளில் சூரசம்காரம் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதை தொடர்ந்து அங்கு அங்குச தேவருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட உற்சவர் விநாயகர் வெள்ளி கேடயத்தில் ஊர்வலமாக தீர்த்த குளத்துக்கு வந்தடைந்தார். நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆனால், சம்பிரதாயப்படி பிள்ளையார்பட்டியில் இன்று விநாயகர் சதுர்த்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்றே பிள்ளையார்பட்டிக்கு ஏரளான பக்தர்கள் வந்து சென்ற நிலையில் இன்று அங்கு வழக்கமான அளவிலேயே கூட்டம் காணப்படுகிறது.

The post நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிள்ளையார்பட்டியில் உற்சவர் விநாயகர் வெள்ளி கேடயத்தில் ஊர்வலம்..!! appeared first on Dinakaran.

Tags : Vijayagar Chaturti Festival ,Viveyakar Silver Shiel ,Pilladyarpatti Sivagangai ,Vinayagar Chaturti Festival ,Pillayarbati Chalapha Vinayagar Temple ,Kapha Vinayakar ,Pilladarpatti ,Viveyakar Chaturthi Festival ,
× RELATED விநாயகர் சதுர்த்தி பண்டிகையை...