×

வேலூர் புதூர் கிராமத்தில் செங்கல் சூளையில் இருந்து வெளியான புகையால் தம்பதி மூச்சுத்திணறி உயிரிழப்பு..!!

வேலூர்: வேலூர் கணியம்பாடி புதூர் கிராமத்தில் செங்கல் சூளையில் இருந்து வெளியான புகையால் தம்பதி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (42), அம்முலு {33) இந்தத் தம்பதிக்கு 16 வயதில் சந்தியா, 14 வயதில் சினேகா என்று 2 மகள்களும், 12 வயதில் அரவிந்த் என்று ஒரு மகனும் உள்ளனர்.

பழனிவேல் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையை கடந்த 15 ஆண்டுகளாகக் குத்தகை எடுத்துவந்துள்ளனர். தம்பதியர் இருவரும் தினமும் பகல் வேளையில் சூளையில் வேலை செய்துவிட்டு, இரவில் வீட்டுக்குச் சென்றுவிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு சூளையை கொளுத்திவிட்டு அருகிலேயே தம்பதி தெய்வசிகாமணி, அம்முலு உறங்கியுள்ளனர்.

செங்கல் சூளையில் இருந்து வெளிவந்த புகையின் காரணமாக இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும் இன்று இருவரையும் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தம்பதி உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர். தம்பதி உயிரிழந்தது தொடர்பாக வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலூர் புதூர் கிராமத்தில் செங்கல் சூளையில் இருந்து வெளியான புகையால் தம்பதி மூச்சுத்திணறி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vellore Pudoor Village Vellore ,Vellore Ganyambati Pudur village ,Vellore District ,Vellore Pudoor Village ,Dinakaran ,
× RELATED சிறுபாசன ஏரிகளுக்கு நீர் செல்ல...