×

துறையூர் அருகே பச்சைமலை பகுதி கோரையாறு அருவியில் குளிக்க நடை மேடை பாதுகாப்பு கம்பி வளையம் அமைக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

துறையூர் : துறையூர் அடுத்த பச்சைமலை வண்ணாடு ஊராட்சியை சேர்ந்த புதூர் கிராமத்திலிருந்து 2.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோரையாறு அருவி. இந்த அருவி மினி குற்றாலம் ,கோரையாறு அருவியில் குளிப்பதற்கும் கண்டுகளிக்கவும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த அருவியில் செல்வதற்கு 2 கி.மீ. தூரத்திற்கு மண் சாலை மட்டும் உள்ளது. இங்கு தார் சாலை அமைத்து தர வேண்டும். இந்த அருவியில் இறங்கி செல்வதற்கு 200 மீட்டர் தூரத்திற்கு பாதை வசதி சரியில்லாமல் உள்ளது.அருவியில் குளிப்பதற்காக பாதுகாப்பு கம்பிகள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறை வசதி செய்து அருவிக்கு செல்லும் வழித்தடத்தை துறையூரிலிருந்து கோரையாறு அருவி வரை அம்பு குறியீட்ட பதாகைகள் வைக்க வேண்டும். பெரிய சுற்றுலா தலமாக அமைப்பதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இந்த கோரையாறு அருவிக்கு சாலை வசதி மற்றும் பாதுகாப்பாக குளிப்பதற்கு நடை மேடை மற்றும் பிடி கம்பிகள் அமைத்துத்தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்கோரையாறு அருவி மினி குற்றாலம் போல் காட்சியளிக்கிறது. இந்த அருவியில் குளிப்பது குற்றால அருவியில் குளித்தது போல் இருக்கிறது என கூறுகிறார்கள். ஒருமுறை மழை பெய்தால் சுமார் 100 நாள்களுக்கும் மேலாக அருவியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும். இந்த மூலிகை தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகதில் பல பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து இந்த அருவியில் குளித்து செல்வார்கள். அருவிக்கு செல்லும் இடத்தில் வழுக்கு பாறை கற்கள் உள்ளது. மேலும் பாதுகாப்பாக அருவியில் இறங்குவதற்கும் குளிப்பதற்கும் பாதுகாப்பு கம்பிகள் பொருத்தப்படவில்லை. ஆனால் , நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிலா அருவி ஆகாய கங்கை அருவி, சேலம் மாவட்டம் ஏற்காடு கிளியூர் அருவி போன்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பாதுகாப்பு கம்பிகள் பொருத்திக் கொடுக்கப்பட்டது போல் திருச்சியின் மினி குற்றாலமான துறையூர் பச்சைமலை வண்ணாடு ஊராட்சி புதூர் அருகில் இருக்கும் கோரையாறு அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாய் குளிப்பதற்கு, பாதுகாப்புக்கு பிடித்துச் செல்ல கம்பிகள் பொருத்திக்கொடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது….

The post துறையூர் அருகே பச்சைமலை பகுதி கோரையாறு அருவியில் குளிக்க நடை மேடை பாதுகாப்பு கம்பி வளையம் அமைக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Koraiyar ,Pachimalai ,Dariyur ,Budur ,Pachimalai Vannadu Panchayat ,Pachamalai ,Thariyaur ,Dinakaran ,
× RELATED காரிச்சாங்குடி, வரதராஜபெருமாள்...