×

காட்டுப்பள்ளியில் புள்ளி மான் மீட்பு

பொன்னேரி: பொன்னேரி அடுத்த காட்டுப்பள்ளி காலாஞ்சி காட்டுப்பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான இடங்களில் முந்திரி, பலா, தென்னை, கொய்யா என பல்வேறு மரங்கள் இருந்தன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் தமிழக அரசு கையகப்படுத்தி கடல் நீரை குடிநீராக்கும் நிறுவனம், கப்பல் கட்டும் தளம், காமராஜர் துறைமுகங்கள், வட சென்னை அனல்மின் நிலையம், தேசிய அனல்மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இதனால் 90 சதவீத காடுகள் அழிக்கப்பட்டன.

தற்போது 10 சதவீதம் உள்ள காடுகளில் காட்டு மாடுகள், மான்கள், வேட்டை நாய்கள் சுற்றி வருகின்றன. இந்நிலையில் காட்டுப்பள்ளி காலாஞ்சி காட்டுப்பகுதியில் உள்ள மான்கள் தண்ணீரை தேடி, தனது இருப்பிடத்தை விட்டு வெளியேறுகின்றன. அவைகள் சில நேரங்களில் வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. தற்போது காட்டுப்பள்ளி காலாஞ்சி காட்டுப்பகுதியில் புள்ளிமான்கள் சுற்றி திரிவதாக பழவேற்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனச்சரக அலுவலர் ரூபஸ் வெஸ்லி தலைமையில் வனவர் நரசிம்மன், வனக்காப்பாளர் கோட்டீஸ்வர ராவ், வேட்டை தடுப்பு காவலர்கள் குணசேகர், கார்மேகம், புகழேந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் காட்டுப்பகுதியில் நுழைந்து 2 மாத ஆண் புள்ளி மானை மீட்டு பழவேற்காடு வனசரக பாதுகாப்பு அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கிண்டி மற்றும் ஆரம்பாக்கம் வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

The post காட்டுப்பள்ளியில் புள்ளி மான் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kalanchi forest ,Ponneri Kattupalli ,Kattupalli ,Dinakaran ,
× RELATED பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே...