×

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுவதில் மகிழ்ச்சி; உள் இடஒதுக்கீடு வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுவதில் மகிழ்ச்சி; உள் இடஒதுக்கீடு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக நிலுவையில் இருந்த நிலையில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் நாடாளுமன்றத்தில் விரைவில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அவர் பேசியதாவது,

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்றே மசோதாவை தாக்கல் செய்து, ஓரிரு நாட்களில் நிறைவேற்றுவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2010ல் மாநிலங்களவையில் மசோதா நிறைவேறிய பின், சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திடீரென சட்டத்திற்கு புத்துயிர் ஊட்டப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மக்களவையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், அது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைவது உறுதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுவதில் மகிழ்ச்சி; உள் இடஒதுக்கீடு வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Chennai ,Bamata ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக...