×

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி பலி எதிரொலி : உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவு!

சென்னை : நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் உணவகங்களில் சோதனை நடத்த உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தின் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். அதே உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 19 பேரும் உடல் உபாதைகளுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட அந்த உணவகத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் சோதனை நடத்த மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். உணவகங்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? தரமான உணவுகள் தயாரிக்கப்படுகிறதா? குளிரூட்டும் பெட்டிகள் தூய்மையாக வைக்கப்படுகிறதா ? என ஆய்வு செய்ய அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தாலோ தரமற்ற உணவுகள் விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

The post நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி பலி எதிரொலி : உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Chennai ,Food Safety Department ,Dinakaran ,
× RELATED தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற...