×

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை; ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு தொடங்கியது..!!

சென்னை: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடற்கூறாய்வு தொடங்கியது. மீராவின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் ஆண்டனியின் 16 வயதுடைய மகள் மீரா. இவர் சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் மின்விசிறியில் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மன அழுத்தம் காரணமாக மீரா தற்கொலை செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வீட்டில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை தொடர்பாக அவரது பள்ளி தோழிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளியின் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பேட்மிண்டனில் ஆர்வம் கொண்ட மீரா, கடந்த 6 மாதங்களுக்கு மேல் மனச்சோர்வுக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தனது தோழிகளை பார்க்க மீரா தனியாக சென்று வந்துள்ளார். தற்போது மீராவின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

The post இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை; ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Vijay Antony ,Omanturar Govt Hospital ,Chennai ,Meera ,Omanturar Government Hospital ,
× RELATED மீனாட்சி சௌத்ரி ஃபிட்னெஸ்